நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ABC Maju உணவகத்துக்குத் தற்காலிகத் தடை: சிங்கப்பூர் உணவு அமைப்பு அறிவிப்பு 

சிங்கப்பூர்:

சிங்கப்பூரின் 230, பேலஸ்டியர் (Balestier) ரோட்டில் இருக்கும் ABC Maju உணவகம் 2 வாரங்களுக்குத் தற்காலிகமாக மூடப்படுவதாகச் சிங்கப்பூர் உணவு அமைப்பு அறிவித்தது.

அக்டோபர் 3 முதல் 16 வரை உணவகம் மூடப்படும்.

12 மாதங்களில் 12 குற்றப்புள்ளிகளை உணவகம் சேகரித்ததால் தடை வருகிறது. மேலும் 800 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.

இரண்டு முறை உணவகம் உதவியாளரைப் பதிவு செய்யத் தவறியது.

ஒரு முறைக்கு 6 குற்றப்புள்ளிகள்.

உணவகத்தில் வேலை பார்க்கும் எல்லா ஊழியர்களும் மறுபடியும் முதல்நிலை உணவுப் பாதுகாப்புப் பயிற்சிக்குச் செல்ல வேண்டும். அதில் தேர்ச்சியடைந்தால் மட்டுமே உணவத்தில் உணவைத் தயாரிக்கும் பணியைத் தொடரலாம் என்று சிங்கப்பூர் உனவு அமைப்பு தெரிவித்தது.

உணவகத்தில் சுத்தமான உணவு தயாரிக்கப்படுகிறது என்பதை உறுதிசெய்யும் அதிகாரிகள் இருந்தால் அவர்கள் மூன்றாம் நிலை உணவுப் பாதுகாப்புப் பயிற்சியில் தேர்ச்சியடைய வேண்டும் என்றும் உணவு அமைப்பு கூறியது.

உணவுக் கடைகள் சுத்தத்தை உறுதி செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்டவர்களை மட்டுமே உணவைக் கையாள அனுமதிக்க வேண்டும் என்று உணவு அமைப்பு குறிப்பிட்டது.

அவற்றை மீறுவது பெரிய குற்றம் என்றும் அது உணவுக் கடைகளுக்கு நினைவூட்டியது.

சுத்தம் இல்லாமல் இருந்தால் உணவு அமைப்புக்குத் தெரிவிக்கும்படி பொது மக்களை அது கேட்டுக் கொண்டது.

ஆதாரம் : மீடியா கோர்ப் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset