நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோற்ற சபாநாயகர் பதவி நீக்கம்

வாஷிங்டன் :

அமெரிக்க நாடாளுமன்றத்தின் மக்களவை செவ்வாய்க்கிழமை வாக்களித்து சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை வெளியேற்றிவிட்டது. குடியரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்தன.

இந்தச் சூழ்நிலையில் மக்களவை மேலும் பல பிரச்சினைகளைச் சந்திக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது. அமெரிக்க மக்களவை, வரலாற்றிலேயே முதன் முறையாக அதனுடைய சபாநாயகரை வாக்களித்து வெளியேற்றி இருக்கின்றது.

216-க்கு 210 என்ற வாக்கு கணக்கில் மெக்கார்த்தி பதவி இழந்தார். மக்களவையில் உள்ள 208 ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எட்டுப் பேர் வாக்களித்து மெக்கார்த்தி பதவி இழக்க காரணமாக இருந்துள்ளனர். 

இதனிடையே, மீண்டும் ஒரு முறை சபாநாயகர் பதவிக்கு முயலப்போவதில்லை என்று செய்தியாளர்களிடம் மெக்கார்த்தி தெரிவித்துள்ளார். 

குடியரசுக் கட்சியினர் அக்டோபர் 10-ஆம் தேதி கூடி அடுத்த சபாநாயகரைப் பற்றி விவாதிக்கத் திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அக்டோபர் 11-ஆம் தேதி புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

-அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset