நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தெற்கு சுமத்ராவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

சுமத்ரா :

இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ராவில் ஏற்பட்டிருக்கும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் இந்தோனேசிய தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் காட்டுத் தீயினால் காற்று மாசடைந்துள்ளது மட்டுமல்லாமல் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

2019-ஆம் ஆண்டு முதல் அந்நாட்டில் பதிவு செய்யப்பட்டு வரும் வறட்சி, எல் நினோ காரணமாக இவ்வாண்டில் மோசமாகியுள்ளது.

விவசாய நிலங்களைச் சுத்தம் செய்யும் நோக்கில் தங்களின் நிலங்களுக்கு விவசாயிகள் தீ வைக்கும் நடவடிக்கை ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளப்படும். 

இருப்பினும் பருவநிலை மாற்றத்தால் இவ்வாண்டு காற்று மாசின் அளவு உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாண்டு மட்டும் சுமார் 267,900 ஹெக்டர் வன நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது. 

இதனால், மலேசியா உட்பட இந்தோனேசியாவின் அண்டை நாடுகளில் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது.

-அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset