நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அரசியல் விமர்சகர்கள் திடீர் கைகலப்பு

இஸ்லாமாபாத் :

பாகிஸ்தானிலுள்ள பிரபல தொலைக்காட்சி அலைவரிசையில் விவாத நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சார்பில் இம்ரான் கானின் வழக்கறிஞர் ஷெர் அப்சல் கான் மார்வாட், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் அப்னான் உல்லா கான் என முக்கிய கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இந்த விவாத நிகழ்ச்சி நேரலையாக ஒளிப்பரப்பானது. அப்போது முன்னாள் பிரதமர் இம்ரான் கானை யூதர்களின் முகவர் என உல்லா கான் விமர்சனம் செய்த நிலையில் அப்சல்கானுக்கும் அவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு நிலையில், வாக்குவாதம் முற்றியதில் திடிரென அப்சல்கான் எழுந்துபோய் உல்லாகானைத் தாக்கினார்.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவர்களைச் சமாதானம் செய்தனர்.

இது தொடர்பான காட்சிகளில் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றது. 

-அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset