நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இன்று அனைத்துலக மொழிபெயர்ப்பு தினம் கொண்டாடப்படுகின்றது

லண்டன் :

மொழிபெயர்ப்பாளர்கள் அதிகம் பணியாற்றும் இடமாக ஐ.நா சபை அமைகின்றது. 

மொழிபெயர்ப்பு இல்லை என்றால் மொழிகள் வளர்ந்திருக்காது. கருத்து பரிமாற்றம், சர்வதேச நாடுகளுக்கு இடையில் நல்லுறவு மேம்பட்டிருக்காது. 

உலகை ஒருங்கிணைத்தல், பேச்சுவார்த்தைக்கு உதவுதல், உலக அமைதி, பாதுகாப்புக்குப் பங்களித்தல் போன்றவற்றுக்கு உறுதுணையாக விளங்கும் மொழிபெயர்ப்பு வல்லுனர்களின் பணியை அங்கீகரிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30-ஆம் தேதி ஐ.நா. சார்பில் உலக மொழிபெயர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. 

வடகிழக்கு இத்தாலியைச் சேர்ந்த செயின்ட் ஜெரோம், புதிய ஏற்பாட்டின் கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் இருந்து பைபிளின் பெரும்பகுதியை லத்தீன் மொழியில் 5-ஆம் நூற்றாண்டில் மொழிபெயர்ப்பு செய்தார்.

மொழிபெயர்ப்பின் முன்னோடியாக அறியப்படும் ஜெரோம் 420 செப்டம்பர் 30-ஆம் தேதி மறைந்தார். 

ஒவ்வொரு ஆண்டும், ஐக்கிய நாடுகள் சபை ஜெரோம் நினைவைப் போற்றும் வகையில் உலகளவில் மொழிபெயர்ப்பு போட்டியினை நடத்தி இந்நாளை கொண்டாடுகிறது.

-அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset