நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மத துன்புறுத்தல்: பாகிஸ்தானில் தஞ்சமடைந்த இந்தியர்கள்

கராச்சி:

இந்தியாவில் மத துன்புறுத்தல் காரணமாக தில்லியைச் சேர்ந்த தந்தை-மகன் பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளனர்.

தில்லி கௌதம்புரி பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஹஸ்னைன் அவரது மகன் இஷாக் அமீர். இவர்கள் தில்லியில் இருந்து பாகிஸ்தானுக்கு துபாய் வழியாக சட்ட விரோதமாக சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக ஹஸ்னைன் கூறுகையில், தில்லியில் நீண்ட காலமாக மதரீதியாக துன்புறுத்தப்பட்டோம். கடந்த 5ஆம் தேதி தில்லியில் இருந்து துபை சென்றோம்.

அங்குள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் விசா பெற்று காபூல் சென்று சாலை வழியாக கந்தஹார் அடைந்தோம்.

கந்தஹாரில் இருந்து சமன் எல்லை வழியாக முகவர் ஒருவரின் உதவியுடன் காரில் ரூ.60,000 செலுத்தி கராச்சி அடைந்தோம். 14 நாள்கள் கழித்து காவல் துறையிடம் நாங்கள் சரணடைந்தோம் என்றார்.

இதுதொடர்பாக கராச்சி காவல் துறையினர், இருவரையும் இந்திய உளவாளிகள் என்று நாங்கள் சந்தேகிக்கவில்லை. அறக்கட்டளையில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset