நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தொலைதூர நூர் 3: செயற்கைக்கோளை செலுத்தியது ஈரான்

டெஹ்ரான்:

தொலைதூர செயற்கைக்கோளை ஈரான் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
பூமிக்கு 450 கி.மீ. தொலைவிலிருந்தபடி அந்த செயற்கைக்கோள் விண்வெளியிலிருந்து படமெடுக்கும்..
இந்த செயற்கைக்கோளை பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டு செல்லும் தொழில்நுட்பத்துடன் செயல்படுத்தி உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரான் அணு ஆயுதம் உருவாக்குவதைத் தடுப்பதற்காக அந்த நாட்டின் மீது அமெரிக்காவும், பிற மேற்கத்திய நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

அணு ஆயதங்களை ஏந்தி தொலைதூரத்தில் தாக்குதல் நடத்தக் கூடிய  பலிஸ்டிக் வகை ஏவுகணைகளை ஈரான் ஆய்வு செய்வதற்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது.

ஆனால், விண்ணில் செயற்கைக்கோளை செலுத்துவதற்கான ராக்கெட்டிலும் பலிஸ்டிக் ஏவுகணை தொழில்நுட்பம் பயன்படுத்தி நூர்3 செயற்கைக்கோளை ஈரான் விண்ணில் செலுத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset