நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டம் செப். 30 முதல் தொடக்கம்

சிங்கப்பூர்:

இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி, பல்வேறு நாடுகளில் உள்ள இந்துக்களும் விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். 

சிங்கப்பூரில் அதிக இந்துக்கள் வாழும் பகுதியான லிட்டில் இந்தியாவில் தீபாவளி பண்டிக்கைக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு, ராதா - கிருஷ்ணா எனும் மையக் கருப்பொருளுடன் தீபாவளி ஒளியேற்றம் செப்டம்பர் 30ஆம் தேதி பெர்ச் சாலையின் திறந்தவெளியில் நடைபெற உள்ளது. 

இதனை இரவு 7.30 மணியளவில் சிங்கப்பூர் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தொடங்கி வைக்க இருக்கிறார்.

தீபாவளி கொண்டாட்டத்தையொட்டி, மொத்தம் 45 ஒளி வளையங்கள் சிராங்கூன் ரோடு, ரேஸ் கோர்ஸ் ரோடு உள்ளிட்ட சாலைகளில் அமைக்கப்பட்டு வருகின்றன. 

இந்த ஒளிவளையங்கள் செப். 30ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை இடம்பெறும். ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு விளக்குகள் ஏற்றப்படும். 

வார நாட்களில் நள்ளிரவு 12 மணி வரையிலும் (சனி ஞாயிறு ஆகிய) வார இறுதிநாட்களில் நள்ளிரவு 1 மணி வரையிலும் ஒளி வீசும். மேலும் நான்கு வெள்ளை குதிரைகளுடனான தங்க ரதம் ஒன்று பெர்ச் சாலையில் அமைக்கப்பட உள்ளது. 

இதன் மூலம் பொதுமக்கள் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு மகிழலாம்.

இந்த பிரம்மாண்டமான தீபாவளிச் சந்தையில் ஆடல், பாடல் உள்ளிட்ட பல்வேறு மேடை நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தீபாவளிக் கொண்டாட்ட ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த லிஷா குழுவினர், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களை கவரும் வையில் பல்வேறு வண்ண வண்ண விளக்குகளுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset