நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இரண்டாம் உலகப் போர்க்கால வெடிகுண்டு தகர்க்கப்பட்டது:  4,000 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்

சிங்கப்பூர் :

இரண்டாம் உலகப் போர்க்கால வெடிகுண்டு இன்று  பிற்பகல் 12.30 மணியளவில் தகர்க்கப்பட்டது. 

இதனால் அப்பகுதியில் வசிக்கும் 4,000க்கும் அதிகமான குடியிருப்பாளர்கள், வெடிகுண்டை வெடிக்கச் செய்யும் நடவடிக்கைக்கு முன்னர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

அப்பர் புக்கிட் தீமாவில் உள்ள கட்டுமானத் தளம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது.

சிங்கப்பூரில் கண்டெடுக்கப்பட்ட ஆகப் பெரிய போர்க்கால வெடிகுண்டுகளில் ஒன்றாக நம்பப்படும் 100 கிலோகிராம் எடையுடைய அந்த வெடிகுண்டு, சிங்கப்பூர் ஆயுதப் படையின் வெடிகுண்டு அகற்றும் பிரிவால் செவ்வாய்க்கிழமை படிப்படியாகத் தகர்க்கப்படும்.

அந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்யும் இரண்டாவது நடவடிக்கை பின்னர் தொடரும் என அறியப்படுகிறது.

குடியிருப்பாளர்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்ப இப்போதைக்குப் பாதுகாப்பானதாக இல்லை.

அந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தபோது ஏற்பட்ட சத்தம், பிற்பகல் 12.30 மணிக்கு புளோக் 153 கங்சா சாலையிலிருந்து கேட்க முடிந்தது.

கட்டுமானத் தளம், சாலைகள், அருகிலுள்ள கால்வாய்கள், குழாய்கள், காலியான கூட்டுரிமை வீடுகள், வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளைக் கட்டட, கட்டமைப்புப் பாதுகாப்புக்காக கட்டட, கட்டுமான ஆணையம், பொது பயனீட்டுக் கழகம், நிலப் போக்குவரத்து ஆணையம் ஆராயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset