நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கால்பந்து தரவரிசை : 134ஆவது இடத்தில் மலேசியா

கோலாலம்பூர் :

உலகக் கால்பந்து தரவரிசையில் மலேசிய அணியினர் 134ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளனர்.

பிபா எனப்படும் அனைத்துலக கால்பந்து சங்கம் உலக அணிகளுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது.

இதில் மலேசிய கால்பந்து அணி 134ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

கடந்த ஜூலை 20ஆம் தேதி வெளியான தரவரிசையில் மலேசிய அணி 136ஆவது இடத்தில் இருந்தது.

தற்போது இரு இடங்கள் முன்னேறி உள்ளது மலேசிய அணி. மேலும் மலேசிய அணி 1094.9 புள்ளிகளை பெற்றுள்ளது.

இப்புதிய பட்டியலில் அர்ஜெண்டினா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. அவ்வணி 1851.41 புள்ளிகளை பெற்றுள்ளது.

பிரான்ஸ், பிரேசில் ஆகிய அணிகள் அடுத்தடுத்த நிலையில் உள்ளன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset