செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஆளுநர் ரவி VS தமிழக அரசு மோதல் முற்றுகிறத: துணைவேந்தர் தேடல் குழுவில் யுஜிசி உறுப்பினரை நீக்கியது தமிழக அரசு
சென்னை:
சென்னை பல்கலை. புதிய துணைவேந்தர் நியமனத்துக்கான தேடல் குழுவில் யுஜிசி உறுப்பினரை நிராகரித்து உயர்கல்வித் துறை அரசிதழில் வெளியிட்டுள்ளது.
கோவை பாரதியார் பல்கலை. மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் புதியதுணைவேந்தருக்கான தேடல் குழுக்கள் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் நியமிக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது. இதற்கிடையே பல்கலை.துணைவேந்தர் தேடல் குழு தொடர்பாக யுஜிசி புதிய பரிந்துரைகளை வெளியிட்டது. அதில், ‘தேடல் குழுவில் 3 முதல் 5 பேர் வரை இடம் பெறலாம். அவற்றில் ஒருவர் யுஜிசி தலைவரால் நியமிக்கப்பட வேண்டும் ’ என்று கூறப்பட்டது. இதையடுத்து துணைவேந்தர் தேடல் குழுவில், யுஜிசி பிரதிநிதியை நியமனம் செய்வதற்கான திருத்தங்களை மேற்கொள்ள ஆளுநர் தரப்பில் இருந்து உயர்கல்வித் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், உயர்கல்வித் துறை ஒப்புதல் அளிக்காததால் தேடல் குழு தங்கள் பணியை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் துணைவேந்தர் பதவிகள் காலியாக கோவை பாரதியார், ஆசிரியர் கல்வியியல் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்துக்கான தேடல் குழுக்களில் யுஜிசிசார்பிலான ஒரு உறுப்பினரை நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி செப்டம்பர் 6-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார்.
மறுபுறம் ஆளுநரின் தன்னிச்சையான இந்த உத்தரவு மரபுமீறிய செயலாகும். இதை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.
தற்போது சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடல் குழுவின் விவரங்களை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டது.
அதில், குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஆளுநர் சார்பில் கர்நாடக மத்திய பல்கலை. துணைவேந்தர் பட்டு சத்யநாராயணா, உறுப்பினர்களாக பல்கலை. சிண்டிகேட் சார்பில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.தீனபந்து, செனட் சார்பில் பாரதிதாசன் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் பி.ஜெகதீசன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுசார்ந்து ஆளுநர் கடந்த வாரம் வெளியிட்ட தேடல் குழு அறிவிப்பில் 4-ஆவது உறுப்பினராக இடம் பெற்றிருந்த யுஜிசி உறுப்பினரின் பெயரும் நீக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையேயான தொடர் மோதல்கள் உயர்கல்வித் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 3, 2024, 9:35 pm
மகளுக்கு திருமணம் செய்துவிட்டு, பிறரை சன்னியாசி ஆக்குவது ஏன்?: ஜக்கி வாசுதேவுக்கு நீதிமன்றம் கேள்வி
October 1, 2024, 9:09 am
தமிழகத்தில் 4-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
September 30, 2024, 9:26 pm
தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா? இல்லை மன்னராட்சியா?: சீமான் கேள்வி
September 28, 2024, 5:50 pm
2030-க்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு: முதல்வர் ஸ்டாலின்
September 28, 2024, 4:08 pm
மயான பூமியை தனியார்மயமாக்குவதா?: திமுக அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்
September 28, 2024, 11:29 am
இயற்கை விவசாயி பத்மஸ்ரீ பாப்பம்மாள் மறைவு: தலைவர்கள் இரங்கல்
September 27, 2024, 1:21 pm