நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கனடா நாட்டு பிரதமர் விமானம் பழுது

புது டெல்லி: 

ஜி20 மாநாட்டில் பங்கேற்றுவிட்டு கனடாவுக்குத் திரும்ப இருந்த அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

கனடாவிலிருந்து வரவழைக்கப்பட்ட மாற்று விமானத்தில் செவ்வாய்க்கிழமை அவர் நாடு திரும்புகிறார்.

அமெரிக்க அதிபர் பைடன், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ  ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் கனடா புறப்பட்டுச் செல்வதாகத் திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் சில மணிநேரங்களுக்கு முன்பு அவரது விமானத்தில் எளிதில் சீர்செய்ய இயலாத தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, அவர் தில்லியிலேயே தங்க வைக்கப்பட்டார்.

அவரை அழைத்துச் செல்வதற்காக மாற்று விமானத்தில் செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்டார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset