நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு 

கோலாலம்பூர்: 

அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமெரிக்க கூட்டரசு வட்டி விகிதத்தை உயர்த்தாது என்று முதலீட்டாளர்கள் தொடர்ந்து திட்டவட்டமாக இருக்கின்றனர்.

இதனால், அமெரிக்க டாலர் மற்றும் மற்ற முக்கிய நாணயங்களுக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது. 

மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 4.6725/6760 ஆக உயர்ந்துள்ளது. 

செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறும் கூட்டத்திற்குப் பிறகு அமெரிக்க கூட்டரசு ரிசர்வ் தனது காலாண்டுக் கணிப்புகளை வெளியிடும் என்று மலேசிய முவாமாலாட் வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் முகமது அப்ஸானிசம் அப்துல் ரஷித் தெரிவித்தார்.

அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட் RM4.66 முதல் RM4.68 வரை தொடர்ந்து நிலைத்திருக்கும் இருக்க வாய்ப்பு இருக்கக் கூடும் என்றார் அவர்.

முக்கிய நாணயங்களுக்கு எதிராக மலேசிய ரிங்கிட் அதிகமாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. 

மலேசிய ரிங்கிட் பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக 5.8551/8595 இலிருந்து 5.8414/8477 ஆக உயர்வடைந்துள்ளது. 

ஜப்பானிய யெனுக்கு எதிராக மலேசிய ரிங்கிட்  3.1855/1881 இலிருந்து 3.1852/1888 ஆகவும் உயர்ந்துள்ளது. 

இருப்பினும், யூரோவிற்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 5.0145/0183 இல் இருந்து 5.0187/0240 ஆக குறைந்தது.

மற்ற ஆசியான் நாணயங்களை விட மலேசிய ரிங்கிட் அதிகமாக வர்த்தகம் செய்யப்பட்டது.

சிங்கப்பூர் டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட் திங்கட்கிழமை முடிவில் 3.4334/4362 இலிருந்து 3.4313/4354 ஆகவும், தாய் பாட் 13.1583/1755 இலிருந்து 13.1339/1528 ஆகவும், பிலிப்பைன்ஸ் பெசோவுக்கு எதிராக 8.28/8.28/ லிருந்து சற்று அதிகமாகவும் வலுவடைந்தது.

இந்தோனேசிய ரூபாய்க்கு எதிராக மலேசிய ரிங்கிட் 304.7/305.2 இல் இருந்து 304.7/305.1 இல் மாறாமல் இருந்தது.

-அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset