நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

22 வருடங்கள் கடந்தும் உலகம் மறக்காத 11/9 பயங்கரவாத தாக்குதல்

வாஷிங்டன் :

2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி அமெரிக்காவின் புகழ் பெற்ற உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்களின் மீதும், அமெரிக்க இராணுவ தலைமையகம் இருக்கும் பென்டகன் கட்டிடம் மீதும், கடத்தப்பட்ட விமானங்களைக் கொண்டு பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். 

மேலும், வேவ்வேறு இடங்களில் இரு தாக்குதல்களைப் பயங்கரவாதிகள் நிறைவேற்றும் முன்பாக அவை முறியடிக்கப்பட்டன.

அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலத்தில் கூச்லேண்ட் கவுன்டி எனும் இடத்தில் உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் ஆகிய இடங்களில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு எஞ்சியிருந்த எக்கு தகடுகளைக் கொண்டு அத்தாக்குதலில் உயிரிழந்தோருக்கு 2013-ஆம் ஆண்டில் ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டது. 

இங்கு 2 நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுமார் 25 ஆயிரம் பேர் வசிக்கும் இந்த கவுன்டி பகுதியில் பேரிடர் மற்றும் ஆபத்தான நேரங்களில் உதவிக்கு விரைந்து வரும் வீரர்களுக்கு காலையிலும், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மாலையிலும் அவர்களை நினைவு கூறும் விதமாக நிகழ்ச்சிகள் நடக்கின்றது.

மவுன அஞ்சலி, மெழுகுவர்த்தி ஏந்திய ஊர்வலம் உட்பட பல நிகழ்ச்சிகள் அமெரிக்கா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

மற்றொரு அமெரிக்க மாநிலமான இண்டியானாவிலுள்ள கொலம்பஸ் பகுதியில் அமெரிக்காவின் அவசர மற்றும் ஆபத்து காலசேவை பணியாளர்கள் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் அவசர மருத்துவ சேவை பணியாளர்கள் (EMS) ஆகியோருக்கு நன்றி கூறி அவர்களை நினைவுக் கூறும் விதமாக நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

ஆண்கள் மற்றும் பெண்கள் சாரணர் படையினர் மிசோரி மாநில ஃபெண்டன் பகுதியில் நடைபெறவுள்ள ஒரு நிகழ்ச்சியில் 11/9 தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். 

அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் தரைமட்டமான உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்களின் நிலப்பகுதி, கிரவுண்ட் ஜீரோ (Ground Zero) என அழைக்கப்படும். இங்கு அமெரிக்க துணை அதிபர் பங்குப் பெறும் நிகழ்ச்சியில் மேடையில் அத்தாக்குதலில் இறந்தவர்களின் பெயர்கள் ஒவ்வொன்றாகப் படிக்கப்படும்.

முதல் பெண்மணி என அழைக்கப்படும் அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடன் பென்டகனில் உள்ள நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.

-அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset