நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் இந்திய உணவகங்களில் பணிபுரிய இந்தியா, பங்களாதேஷ், இலங்கை நாட்டு சமையல்காரர்களை எளிதில் பெற வழி பிறந்தது 

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் உள்ள இந்திய உணவகங்கள் இந்தியா, பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து சமையல்காரர்களைத் தருவிக்க வழியேற்பட்டுள்ளது.

S Pass அனுமதிக்குக் குறைந்தபட்சத் தகுதிச் சம்பள வரம்பும் முதற்கட்டத் தீர்வைக் கட்டணமும் கடந்த ஆண்டிலிருந்து உயர்த்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் ஊழியர் தட்டுப்பாடுள்ள வேலைகளுக்கும் தானியக்கம் செய்யமுடியாத துறைகளுக்கும் உதவும் வகையில் பாரம்பரியமற்ற வேலைகளின் பட்டியலை மனிதவள அமைச்சு அறிமுகம் செய்திருந்தது.

11 Best Indian Vegetarian Restaurants in Singapore

அதன்படி இந்திய உணவகங்கள் சமையல்காரர்களைத் தருவிப்பது எளிதாகும்.

அடுத்த மாதம் (செப்டம்பர் 2023) முதல் தேதியிலிருந்து அது நடப்புக்கு வரும்.

பாரம்பரியமற்ற வேலைகளுக்கான பட்டியலில்
ஹோட்டல் பராமரிப்புப் பணிகளைச் செய்வோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டுச் சமையல்காரர்களை வேலைக்கு அமர்த்த விரும்பும் இந்திய உணவகங்கள் செப்டம்பர் முதல் தேதியிலிருந்து விண்ணப்பிங்களைச் சமர்ப்பிக்கலாம்.

இந்திய உணவுத் துறைத் தரப்பினரும் அரசாங்கத் தரப்பினரும் கலந்த குழு ஒன்று விண்ணப்பங்களை ஆராயும்.

தகுதிபெறும் உணவகங்கள் பின்னர் வேலை அனுமதி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

மனிதவள அமைச்சின் இணையப்பக்கத்தில் படிவங்கள் உள்ளன.

சிங்கப்பூர் இந்திய உணவகங்கள் அமைப்பின் கௌரவச் செயலாளர் ச. மஹேந்திரன் திட்டத்தை வரவேற்பதாகச்   சொன்னார்.

"சிங்கப்பூரில் இந்திய மரபுடைமையைக் கட்டிக்காப்பதற்கும் பாரம்பரிய இந்திய உணவைப் பரிமாறுவதற்கும் இது நிச்சயமாக உதவும்," என்று அவர் கூறினார்.

சிங்கப்பூர் உணவகங்கள் ஏற்கெனவே மலேசியா, சீனா, மேற்காசியா ஆகிய பகுதிகளிலிருந்து சமையல்காரர்களைத் தருவிக்கமுடியும்.

ஆதாரம்: மீடியா கோர்ப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset