நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் அன்வார் உல் ஹக் கக்கர்

இஸ்லாமாபாத்: 

பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமராக பலூசிஸ்தான் அவாமி கட்சியை சேர்ந்த அன்வர் உல் ஹக் கக்கரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்தனர்.

பாகிஸ்தானின் 15 ஆவது நாடாளுமன்றம் புதன்கிழமை கலைக்கப்பட்டது.

அதையடுத்து, புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சில மாதங்களில் நடைபெறவுள்ளது.

அந்தத் தேர்தலை நடத்துவதற்கும், புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும்வரை நாட்டின் ஆட்சிப் பொறுப்பை நிர்வகிக்கவும் இடைக் காலப் பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கான பேச்சுவார்த்தையை எதிர்க் கட்சிகளுடன் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், பிஏபி கட்சி எம்.பி. அன்வர் உல் ஹக்கரின் பெயரை ஷாபாஸ் ஷெரீஃபும்
 நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் ராஜா ரியாஸும் பரிந்துரைத்தனர்.

இதற்கு அதிபர் ஆரிஃப் ஆல்வி உடனடியாக ஒப்புதல் அளித்தார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset