நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நைஜரில் போர் பதற்றம்: இந்தியர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு

அபுஜா:

ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்ட நைஜர் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்குத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பான எகோவாஸ் படைகளுக்கு உத்தரவிட்டுள்ளதால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து எகோவாஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், நைஜரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மீண்டும் நிறுவுவதற்கு அந்த நாட்டு ராணுவத்துக்கு அளித்திருந்த கெடு முடிந்துவிட்டது.

எனவே, தாக்குதலுக்கான தயார் நிலையில் இருக்குமாறு உறுப்பு நாடுகளின் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indians told to Leave Niger FAST as War is near | USA vs Russia in Africa -  YouTube

இதனிடையே, தங்கள் மீது மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால் பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ள அதிபர் முகமது பஸுமைப் படுகொலை செய்வோம் என நைஜர் ராணுவ ஆட்சியாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

நைஜரில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேறும்படி இந்திய அரசு அறிவித்துள்ளது.  

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset