நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலங்கையில் மீண்டும் சீன உளவு கப்பல்

கொழும்பு:

கொழும்பு துறைமுகத்துக்கு அதிநவீன கண்காணிப்பு வசதிகளுடன் கூடிய சீன உளவு பார்க்கும் போர் கப்பல் வந்துள்ளது.

ஓராண்டுக்குப் பிறகு இலங்கைக்கு இரண்டாவது முறையாக சீன கண்காணிப்பு கப்பல் வந்திருப்பது இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முன்பு எதிர்ப்பு தெரிவிதிருந்ததால் இந்த கப்பலுக்கான அனுமதியை இலங்கை தாமதப்படுத்தியதாக  கூறப்படுகிறது.

சீனாவுக்குச் சொந்தமான சர்ச்சைக்குரிய விண்வெளி ஆய்வுக் கப்பலான "யுவான் வாங்5' என்ற செயற்கைக்கோல் தொழில்நுட்பத்துடன் கண்காணிப்புத் திறனுடைய போர் கப்பல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை வந்தது குறிப்பிடித்தக்கது.

தற்போது ஹய் யாங் 24 ஹவோ இலங்கையின் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது.
129 மீட்டர் நீளம் கொண்ட இந்தக் கப்பலில் தளபதி ஜின் ஷின்னுடன் 138 பேர் வந்துள்ளனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset