நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் காட்டுத் தீ - 36 பேர் பலி

நியூயார்க்:

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்திலுள்ள மாவி தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 36 பேர் பலியாகினர்.

அமெரிக்காவின் ஹவாய் மாகாணம், மாவி தீவில் திடீரென காட்டுத் தீ மிக வேகமாகப் பரவியது.  

தீவு முழுவதும் பரவிய காட்டுத் தீயில் ஏராளமான வீடுகள், வாகனங்கள் தீக்கிரையாகின. மேலும், தீயில் கருகி 36 பேர் உயிரிழந்ததாகவும், ஏராளமானவர்கள் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

271 கட்டுமானங்கள், 19,000 வீடுகள், கடைகள், பிற கட்டடங்கள் தீயில் சேதமடைந்ததாகவும் அவர்கள் கூறினர்.

இந்தக் காட்டுத் தீயில் மாவி தீவைச் சேர்ந்த பாரடைஸ் நகரம் முழுமையாக தீக்கிரையானது. 1,700ளில் உருவாக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலாத் தலமான லஹேனா நகரும் காட்டுத் தீயால் கடுமையாக பாதிக்கப்பட்டது.

அந்த நகரின் 150 வருட பழைமை வாய்ந்த ஆலமரமும் தீயில் கருகியது.

காட்டுத் தீயிலிருந்து தப்புவதற்காக கடலுக்குள் குதித்த 14 பேரை கடலோரக் காவல் படையினர் மீட்டனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset