நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: கட்டடங்கள் சேதம்

மாஸ்கோ:

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் ட்ரோன் மூலம் உக்ரைன் மீண்டும் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவிக்கையில், மாஸ்கோவுக்கு வெளியே இரண்டு உக்ரைன் ட்ரோன்களை ரஷிய வான்பாதுகாப்பு ஏவுகணைகள் இடைமறித்து அழித்தன. மேலும் ஓர் ஆளில்லா விமானம் மின்னணு ஆயுதம் மூலம் செயலிழக்கச் செய்யப்பட்டது.

அந்த விமானம், மாஸ்கோ நகர வர்த்தக மையப் பகுதியிலுள்ள அடுக்குமாடி கட்டடத்தில் விழுந்து வெடித்தது. இதில், கட்டடத்தின் முகப்புப் பகுதி சேதமடைந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சேதமடைந்த கட்டடம், ரஷிய அதிபர் மாளிகையான க்ரெம்ளினுக்கு வெறும் 7.2 கி.மீ. தொலைவில் உள்ளது.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது.இதனால் இரு நாடுகளுக்கும் போர் நீடித்து வருகிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset