நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

டிவிட்டர் தலைமையகத்தில் `எக்ஸ்' சின்னம் அகற்றப்பட்டது

சான்பிரான்சிஸ்கோ :

நகர நிர்வாகத்திடம் உரிய அனுமதியும் பெறாததால் `எக்ஸ்' சின்னம் டிவிட்டர் தலைமையகத்திலிருந்து அகற்றப்பட்டது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான்பிரான்சிஸ்கோவை தலைமையிடமாக கொண்டு டிவிட்டர் நிறுவனம் செயல்படுகிறது. 

இந்நிறுவனத்தை உலகப் பணக்காரர்களுள் ஒருவரான எலான் மஸ்க் வாங்கியது முதல் பல மாற்றங்களைச் செய்து வருகிறார். டிவிட்டர் செயலியின் பெயரை `எக்ஸ்' என மாற்றினார். 

அதுமட்டுமல்லாமல்,  பல ஆண்டுகளாக அதன் அடையாளமாக இருந்த நீலப்பறவையை மாற்றி `எக்ஸ்' என்ற சின்னத்தைக் கொண்டு வந்தார். 

`எக்ஸ்' என்ற ஒளிரும் சின்னம் டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை அலுவலக கட்டிடத்தின் மேற்கூரையில் பொருத்தப்பட்டது. 

ஆனால் இது பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக ஒரே நாளில் 24 புகார்கள் சென்றன. 

மேலும் நகர நிர்வாகத்திடம் இதற்கு உரிய அனுமதியும் பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இந்த `எக்ஸ்' சின்னம் அங்கிருந்து அகற்றப்பட்டது. பாதசாரிகளின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சான்பிரான்சிஸ்கோ நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

-அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset