நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

துபாய் குளோபல் வில்லேஜில் உணவு வண்டிக் கடைகளை திறக்க லைசன்ஸ் இனி தேவையில்லை

துபாய்:

துபாயின் குளோபல் வில்லேஜ் சீசன் 28 எதிர்வரும் அக்டோபர் 18 ஆம் தேதி தொடங்குகின்ற நிலையில், கியோஸ்க் மற்றும் உணவு வண்டிகளை அதன் உள்ளே அமைப்பதற்கான பதிவுகள் தற்போது திறக்கப்படும் என குளோபல் வில்லேஜ் நிர்வாகம் அறிவித்துள்ளது. துபாய் குளோபல் வில்லேஜில் உணவு வண்டிக் கடைகளை திறக்க லைசன்ஸ் இனி தேவையில்லை என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. 

அதுபோல, சரக்கு மேலாண்மைக்கான ஸ்டோரேஜ் வசதிகளை வழங்குவதுடன் வர்த்தக நிறுவனங்களுடன் இணைந்து வர்த்தகத்தை ஆதரிப்பதாகவும், கூடுதலாக பங்கேற்பாளர்களுக்கு கூட்டரசின் வரி விதிப்பு ஆணையமான ஃபெடரல் டேக்ஸ் அத்தாரிட்டி பதிவு ஆதரவை வழங்குவதாகவும் குளோபல் வில்லேஜ் கூறியுள்ளது.

Global Village Dubai Tour with Skip-The-Line Tickets 2023 - Viator

அமீரகத்தில் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றான குளோபல் வில்லேஜ், அதன் கடந்த ஆண்டு சீசனில் உலகம் முழுவதிலும் இருந்து 9 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

மேலும் இந்த ஆண்டு வழக்கத்தை விடவும் ஒரு வாரம் முன்னதாகவே அதாவது அக்டோபர் 18ம் தேதியே திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: Khaleej Times

தொடர்புடைய செய்திகள்

+ - reset