நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஆப்கானிஸ்தானில் 1.5 கோடி மக்கள் உணவு நெருக்கடியை எதிர்நோக்குகின்றனர்: யுனிசெஃப்

நியூயார்க்: 

ஆப்கானிஸ்தானில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வருகிறது. வெள்ளம், பஞ்சம் காரணமாக ஆப்கன் மக்கள் நெருக்கடியில் உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தற்போது 1.5 கோடி மக்கள் உணவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். 3 கோடி மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

64 சதவீத குடும்பங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளன. 

இதுகுறித்து யுனிசெஃப் கூறுகையில், “என்ஜிஓ, ஐ.நா. அமைப்புகளில் ஆப்கன் பெண்கள் பணிபுரிய தலிபான் அரசு தடை விதித்துள்ளது. பெண்கள் குறைந்தளவு ஆடை அணிந்து பொதுவெளியில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக மற்றும் பொருளாதார செயல்பாட்டில் பெண்கள் பங்கேற்பது அவசியம். இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால் அங்கு பெண்கள், குழந்தைகளின் நிலையை மேம்படுத்துவது சிக்கலாக மாறியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset