செய்திகள் தமிழ் தொடர்புகள்
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இரயில் விபத்து: கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் இரத்து
சென்னை :
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை இரயில்கள் உள்பட 3 இரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதுவரை இந்த விபத்தில் 233 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒடிசா இரயில் விபத்துக் காரணமாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மாலை நடைபெறவிருந்த கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செம்மொழிப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர்க் கண்காட்சிக்கு முதலமைச்சர் செல்லும் நிகழ்ச்சியும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்று மரியாதை மற்றும் ஓமந்தூராரில் உள்ள சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு மட்டும் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
December 26, 2025, 4:35 pm
அதிமுகவில் விருப்ப மனு அளிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு: எடப்பாடி பழனிசாமி
December 24, 2025, 7:28 am
“விஜய் குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை”: பாஜக தமிழகத் தலைவர் நயினார் நாகேந்திரன்
December 23, 2025, 11:26 pm
எஸ் டி கூரியர் இணை இயக்குனரும் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியின் சகோதரருமான சிராஜூத்தீன் காலமானர்
December 23, 2025, 12:58 pm
சென்னை விமான நிலையத்தில் போதிய விமானங்கள் இல்லை: பயணிகள் கடும் அவதி
December 22, 2025, 2:04 pm
மாமல்லபுரத்தில் நடைபெறும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்துகொண்டார்
December 22, 2025, 8:25 am
திருப்பரங்குன்றத்தில் தொழிலாளியைத் தாக்கி பாஜவினர் அராஜகம்
December 21, 2025, 11:23 pm
முதல்வருடன் ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் சந்திப்பு
December 21, 2025, 10:46 pm
