
செய்திகள் தமிழ் தொடர்புகள்
மதுரை - சிங்கப்பூர் நேரடி விமான சேவை: சண்முகம் ஸ்டாலினிடம் வேண்டுகோள்
சென்னை:
சிங்கப்பூர் சட்ட அமைச்சர் சண்முகத்தை சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது வேண்டுகோளை ஏற்று மதுரை - சிங்கப்பூர் நேரடி விமான சேவை தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
தமிழகத்தில் தொழில் துறையை மேம்படுத்தும் வகையில் புதிய முதலீடுகளை ஈர்க்கவும், சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுடன் தமிழகத்துக்கு உள்ள பொருளாதார மற்றும்
வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும், சென்னையில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த
நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த 23-ம் தேதி சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், சிங்கப்பூர் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரனை சந்தித்துப் பேசினார். பின்னர், முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டார். இதேபோல, சிங்கப்பூர் உள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகத்தை நேற்று சந்தித்த முதல்வர் ஸ்டாலின், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
இந்த சந்திப்பின்போது, கொள்முதல் அமைப்புகளை மதிப்பிடும் முறை, தமிழக தொழில்கள், சேவை நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் போன்றவற்றில் இணைய பாதுகாப்பை மேம்படுத்தல், மாநில நிறுவனங்களுக்கான இணைய பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்துதல், தரவு தனியுரிமை அம்சங்கள் போன்றவற்றில் அரசு நிறுவனங்கள், தமிழக காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளிப்பது ஆகியவை குறித்து, முதல்வர் ஸ்டாலினுடன், அமைச்சர் கே.சண்முகம், உரையாடினார்.
மேலும், ‘‘சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமான சேவையைத் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று சண்முகம் கோரிக்கை விடுத்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின், ‘‘இதுகுறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
June 30, 2025, 7:11 pm
சென்னையில் மின்சாரப் பேருந்துகள் இயக்கம்: வழித்தடங்கள், சிறப்பு அம்சங்கள் சுருக்கமான பார்வை
June 29, 2025, 6:34 pm
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது: இந்திய வானிலை மையம்
June 29, 2025, 11:12 am
பாமக தேர்தலுக்காக உருவான கட்சி அல்ல; ராமதாஸ், அன்புமணியை சந்தித்து பேசுவேன்: சீமான்
June 28, 2025, 6:08 pm
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட குரங்கால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு
June 28, 2025, 12:52 pm
புதுச்சேரி அரசியலில் திடீர் பரபரப்பு: பாஜக அமைச்சர், 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா
June 28, 2025, 12:44 pm
மாணவர்கள் தண்ணீர் குடிக்க நேரம் வழங்க வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் உத்தரவு
June 27, 2025, 11:01 am