
செய்திகள் தமிழ் தொடர்புகள்
சிங்கப்பூர் முதலீட்டாளர் மாநாட்டில் வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்தார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்
சிங்கப்பூர்:
சிங்கப்பூருக்கு வந்திருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்குள்ள முன்னணி நிதி, தொழில்துறை நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி இருக்கிறார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் இன்று முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
உலகத் தரத்திலான திறமைகள், போதுமான உள்கட்டமைப்பு, நில வங்கிகள், கொள்கை ஸ்திரத்தன்மை ஆகியவற்றுடன் விருப்பமான முதலீட்டுத் தளமாகத் தமிழ்நாடு அரசின் ஆதரவு முதலீட்டாளர்களுக்கு இருக்கும் என்று முதல்வர் உறுதியளித்தார்.
நிகழ்வில் கலந்துகொண்ட 300க்கும் மேற்பட்ட தொழிலதிபர்களுக்கு தமிழகத்தின் கட்டமைப்பு வசதிகள் எடுத்துக்காட்டப்பட்டது.
தமிழ்நாட்டில் முதலீடு செய்வதில் அபரிமிதமான ஆர்வம் இருப்பதைக் கண்டு தாம் மிகவும் மகிழ்வதாக முதல்வர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அவர்களை முதல்வர் அழைத்தார்.
முன்னதாக Temasek நிறுவன நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டில்ஹன் பிள்ளை சந்திரசேகரா, Sembcorp நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி கிம் யின் வோங், CapitaLand நிறுவனத் தலைமை நிர்வாக இயக்குநர் சஞ்சீவ் தாஸ்குப்தா ஆகியோரையும் முதல்வர் சந்தித்து பேசினார்.
சிங்கப்பூருக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள நீண்ட கால உறவை மறுவுறுதிப்படுத்தியதாகத் முதல்வர் ஸ்டாலின் தமது Twitter பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தொழிலியல் வளாகங்கள், தளவாடங்கள் ஆகிய துறைகளில் ஏற்கனவே உள்ள முதலீடுகளை உணவு பதப்படுத்துதல், மீன்பிடித்தல் போன்ற புதிய துறைகளுக்கும் எப்படி விரிவுபடுத்தலாம் என்பது குறித்து ஆராய்ந்ததாக அவர் சொன்னார்.
சிங்கப்பூருக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள வரலாற்றுபூர்வ உறவை மேலும் வளப்படுத்த விரும்புவதாகவும் மு க ஸ்டாலின் தெரிவித்தார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
May 5, 2025, 8:36 am
கொடைக்கானலில் கோடைவிழா: மலர்க் கண்காட்சிக்குத் தயாராகி வருகிறது பிரையன்ட் பூங்கா
May 3, 2025, 7:24 pm