நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சிங்கப்பூரில் தமிழக முதல்வர் ஸ்டாலின்

சிங்கப்பூர்:

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சிங்கப்பூர் வந்தடைந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்க, சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு 9 நாட்கள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கவும் வரும் 2024 ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கவும் அரசு முறை பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று புறப்பட்டார். 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு பிற்பகல் சிங்கப்பூர் வந்தடைந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின், தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் சென்றுள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset