நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

MUSIC FEST WITH SHANKAR MAHADEVAN இசை நிகழ்ச்சி இன்று மாலை பிரம்மாண்டமான முறையில் நடைபெறுகிறது

கோலாலம்பூர்: 

பிரபல பின்னணிப் பாடகரும் இசையமைப்பாளருமான ஷங்கர் மஹாதேவனின் MUSIC FEST WITH SHANKAR MAHADEVAN இசை நிகழ்ச்சி இன்று (மே 20ஆம் தேதி) மாலை பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.  

இந்த இசைநிகழ்ச்சியை MY EVENTS INTERNATIONAL நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள வேளையில் MEDIA MASONS நிறுவனம் இணை ஏற்பாட்டாளர்களாக செயல்படுகின்றனர். 

மாலை 4.00 மணிக்கு ரசிகர்களுக்கு நுழைவு வாயில்கள் திறக்கப்படும் என்று ஏற்பாட்டாளரான மை ஈவண்ட்ஸ் இண்டர் நேஷ்னல் நிறுவனம் அறிவித்துள்ளது.

முதல் இரண்டு மணி நேரம் உள் நாட்டுக் கலைஞர்களின் நிகழ்ச்சி நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஷங்கர் மஹாதேவன் குழுவினர் அதிரடி விருந்து படைக்க உள்ளனர்.

ஷங்கர் மஹாதேவனின் இசை நிகழ்ச்சியில் சிவாங்கி, ரக்‌ஷித்தா சுரேஷ், அய்யனார், பரத், ஶ்ரீகாந்த் ஹரிஹரன், விஷால், ஶ்ரீதர், மானசி, திவாகர் ஆகிய பாடகர்களும் ரசிகர்களுக்கு இசை விருந்தினைப் படைக்க ஆவலாக உள்ளனர். 

இந்த இசை நிகழ்ச்சியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. 

MUSIC FEST WITH SHANKAR MAHADEVAN  இசை நிகழ்ச்சி MEGA STAR ARENA KUALA LUMPUR SUNGEI WANG PLAZA எனுமிடத்தில் நடைபெறவுள்ளது.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset