
செய்திகள் கலைகள்
ஹாரிஸ், அனிருத், சாய் அபயங்கர் உள்ளிட்ட பலர் உங்களிடம் இருந்து சென்று பெரிய இசையமைப்பாளராக ஆகியிருக்கிறார்கள். அதில் உங்களுக்கு சந்தோஷமா, பொறாமையா?: ஏ ஆர் ரஹ்மான் பதில்
சென்னை:
‘தக் லைஃப்’ படத்தை வெவ்வேறு மாநிலங்களில் விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு. ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ள இப் படத்தின் இசை வெளியீட்டு விழா மே 24-ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
‘தக் லைஃப்’ படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் “ஹாரிஸ், அனிருத், சாய் அபயங்கர் உள்ளிட்ட பலர் உங்களிடம் இருந்து சென்று பெரிய இசையமைப்பாளராக ஆகியிருக்கிறார்கள். அதில் உங்களுக்கு சந்தோஷமா, பொறாமையா?” என்ற கேள்வி ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்கப்பட்டது. அதற்கு “எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எவ்வளவு குறைவாக படங்கள் செய்கிறோமோ, அவ்வளவு திறமையாக இசையமைக்க முடியும்.
நிறைய பேர் இல்லையென்றால் என்னிடம் வருவார்கள். முடியாது என்று சொன்னால் படம் பண்ண மாட்டேன் என்கிறார் என்று சொல்வார்கள். அது இப்போது முடியாது. ஹாரிஸ், அனிருத், சாய் எல்லாம் பண்ணும்போது என்னுடைய படங்களுக்கு இசையமைக்க இன்னும் அதிக நேரம் கிடைக்கிறது. அதனால், நிறைய தரமான இசையைக் கொடுக்க முடிகிறது” என்று பதிலளித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 29, 2025, 7:48 am
90களின் புகழ்பெற்ற நட்சத்திரங்களும் இயக்குனர்களும் கோவாவில் ஒன்றுகூடல்
July 28, 2025, 3:38 pm
காப்புரிமை விவகாரத்தில் இளையராஜா மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்
July 28, 2025, 11:18 am
மகளின் பட்டத்திற்காக பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
July 26, 2025, 4:11 pm
பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ படத்தில் கௌரவ வேடத்தில் சிவகார்த்திகேயன்
July 23, 2025, 4:41 pm
நடிகர் சூர்யாவின் கருப்பு படத்தின் டீசர் வெளியானது: ரசிகர்கள் உற்சாகம்
July 22, 2025, 10:00 am
14ஆவது ஆண்டாக நடைபெற்ற இனிமைக்கோர் இரவு இசை நிகழ்ச்சி: 60,70ஆம் ஆண்டு பாடல்களின் சங்கமம்
July 20, 2025, 10:26 am