
செய்திகள் கலைகள்
நடிகர் ரவியுடன் இணைத்து பரப்பப்படும் இணைய ‘தாக்குதல்’களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன்: பாடகி கெனிஷா எச்சரிக்கை
கோடம்பாக்கம்:
நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி பிரிவு விவகாரத்தில் தன் மீது தொடுக்கப்படும் ஆன்லைன் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், சட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளார் பாடகி கெனிஷா.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “அனைத்து வசவாளர்களுக்கும்: கெனிஷாவின் வழக்கறிஞர் குழுவில் இருந்து” என்று தலைப்பிட்டு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் பாடகி கெனிஷா ஆன்லைனில் தொடர்ச்சியாக கொலை மிரட்டல், பாலியல் வன்கொடுமை மிரட்டல், ஆபாச குறுஞ்செய்திகள் உள்ளிட்ட தாக்குதல்களால் குறிவைக்கப்படுவதால் அவர் மனரீதியான அதிர்ச்சிக்கு உள்ளாகியிருப்பதாகவும், இதனால் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மிரட்டல்கள் தொடர்பான ஸ்க்ரீன்ஷாட்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் சட்டத்தின் முன் சமர்ப்பிக்கப்படும் என்றும், அடுத்த 48 மணி நேரத்துக்குள் கெனிஷா குறித்த அவதூறுகள், வீடியோக்கள், போட்டோக்கள், ஆபாச பின்னூட்டங்கள் உள்ளிட்டவற்றை நீக்கவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ரவி மோகன் - ஆர்த்தி ரவி பிரிவுக்கு காரணம் பாடகி கெனிஷா என்று பலரும் கூறிய நிலையில் ரவி மோகன் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில், அண்மையில் நடந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமண விழாவில் கெனிஷாவும் ரவிமோகனும் ஜோடியாக வருகை தந்தனர். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாக பரவியது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 29, 2025, 7:48 am
90களின் புகழ்பெற்ற நட்சத்திரங்களும் இயக்குனர்களும் கோவாவில் ஒன்றுகூடல்
July 28, 2025, 3:38 pm
காப்புரிமை விவகாரத்தில் இளையராஜா மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்
July 28, 2025, 11:18 am
மகளின் பட்டத்திற்காக பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
July 26, 2025, 4:11 pm
பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ படத்தில் கௌரவ வேடத்தில் சிவகார்த்திகேயன்
July 23, 2025, 4:41 pm
நடிகர் சூர்யாவின் கருப்பு படத்தின் டீசர் வெளியானது: ரசிகர்கள் உற்சாகம்
July 22, 2025, 10:00 am
14ஆவது ஆண்டாக நடைபெற்ற இனிமைக்கோர் இரவு இசை நிகழ்ச்சி: 60,70ஆம் ஆண்டு பாடல்களின் சங்கமம்
July 20, 2025, 10:26 am