
செய்திகள் கலைகள்
நான் அழகிப் போட்டிக்குத்தான் வந்தேன்; ஹைதராபாத் பணக்காரர்களை என்டேர்டைன் செய்ய வரவில்லை: உலக அழகி போட்டியில் விலகிய மிஸ் இங்கிலாந்து பகிரங்க குற்றச்சாட்டு
ஹைதராபாத்:
உலக அழகி 2025-ம் ஆண்டுக்கான போட்டி இந்தியாவில் ஹைதராபாத் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றுள்ளனர். இந்தப் போட்டியில் இருந்து பாதியிலேயே விலகினார் மிஸ் இங்கிலாந்து மில்லா மேகி.
நான் அழகிப் போட்டிக்குத்தான் வந்தேன்; ஹைதராபாத் பணக்காரர்களை என்டேர்டைன் செய்ய வரவில்லை என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், இங்கிலாந்தின் ஊடக நிறுவனத்துடன் இந்தியாவில் நடைபெறும் உலக அழகி போட்டியில் தனக்கு கிடைத்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் போட்டியின் ஏற்பாட்டாளர்கள் மீது சில குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார்.
“போட்டியில் பங்கேற்ற பல்வேறு நாடுகளின் அழகிகள் மேக்-அப், கவுன்களை அணிவதோடு நடுத்தர வயது ஆண்கள் சிலரை என்டர்டெயின் செய்ய வேண்டிய நிர்பந்தமும் இருந்தது. அது முற்றிலும் நம்பமுடியாத வகையில் இருந்தது. அந்த தருணத்தில் பாலியல் தொழிலாளி போல உணர்ந்தேன்.
ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அதில் நான் கலந்து கொண்டேன். ஆனால், வித்தை காட்டும் குரங்குகளை போல நாங்கள் உட்கார வைக்கப்பட்டோம். ஆறு பேர் வீற்றிருக்கும் ஒரு மேசையில் இரண்டு போட்டியாளர்கள் அமர்ந்திருந்தோம்.
அவர்களை என்டர்டெயின் செய்ய வேண்டியது எங்களது பணியாக இருந்தது. சமூக மாற்றம் சார்ந்த எங்களது பேச்சுக்கு அவர்கள் செவிகொடுக்கவில்லை. அது தவறு என எனக்கு பட்டது. இதற்காக இங்கு நாங்கள் வரவில்லை. உலக அழகி போட்டிக்கு இருக்கின்ற மதிப்பு மங்கிவிட்டது. அப்போதே போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்துவிட்டேன்” என மில்லா மேகி கூறியுள்ளார்.
உலக அழகி போட்டி வரலாற்றில், போட்டியில் இருந்து விலகிய முதல் மிஸ் இங்கிலாந்தாக மேகி அறியப்படுகிறார். அவருக்கு மாற்றாக மிஸ் இங்கிலாந்து போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த சார்லோட் கிராண்ட், தற்போது இந்தியாவில் நடைபெறும் உலக அழகி போட்டியில் பங்கேற்றுள்ளார்.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் 72-ஆவது உலக அழகிப் போட்டி மே 10-ஆம் தேதி தொடங்கியது. இம்மாதம் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 120 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 29, 2025, 7:48 am
90களின் புகழ்பெற்ற நட்சத்திரங்களும் இயக்குனர்களும் கோவாவில் ஒன்றுகூடல்
July 28, 2025, 3:38 pm
காப்புரிமை விவகாரத்தில் இளையராஜா மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்
July 28, 2025, 11:18 am
மகளின் பட்டத்திற்காக பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
July 26, 2025, 4:11 pm
பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ படத்தில் கௌரவ வேடத்தில் சிவகார்த்திகேயன்
July 23, 2025, 4:41 pm
நடிகர் சூர்யாவின் கருப்பு படத்தின் டீசர் வெளியானது: ரசிகர்கள் உற்சாகம்
July 22, 2025, 10:00 am
14ஆவது ஆண்டாக நடைபெற்ற இனிமைக்கோர் இரவு இசை நிகழ்ச்சி: 60,70ஆம் ஆண்டு பாடல்களின் சங்கமம்
July 20, 2025, 10:26 am