நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இம்ரான் கானை 8 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி: பாகிஸ்தானில் தொடரும் கலவரம்

இஸ்லாமாபாத்:

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை 8 நாள் காவலில் வைத்து விசாரிக்க அந்த நாட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அல்காதிர் அறக்கட்டளை வழக்கில், சட்டவிரோத நில விற்பனை மூலம் ரூ.5,000 கோடி அரசுப் பணத்தை இம்ரான் கான் பெற்றுக் கொண்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இம்ரான் கான் இஸ்லாமாபாதிலுள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது இம்ரான் கானை 14 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இம்ரான் கான் தரப்பு வழக்குரைஞர்கள், இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டது என்பதால் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

எனினும், நீதிபதி பஷீர், இம்ரானை 8 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.

இம்ரான் கான் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் வன்முறைப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

2 நாள்களாக நடைபெற்று வரும் இந்தக் கலவரத்தில் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலவரத்தைக் கட்டுப்படுத்த, பஞ்சாப், கைபர் பக்துன்கவா உள்ளிட்ட பதற்றம் நிறைந்த மாகாணங்களில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே இந்த வழக்கு விசாரணையின்போது, தான் என்ஏபி காவலில் வைத்து விசாரிக்கப்பட்டபோது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், கழிவறையை பயன்படுத்தக்கூட அனுமதிக்கப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் இம்ரான் கான் குற்றம்சாட்டினார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset