நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாக்முத் நகரத்தில் ரஷியாவுக்கு பின்னடைவு: உக்ரைன் அறிவிப்பு

கீவ்:

பாக்முத் நகரில் ரஷிய படையினர் கைப்பற்றியுள்ள பகுதிகளிலிருந்து 2 கி.மீ. பின்வாங்கியுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து உக்ரைன் தரைப் படைப் பிரிவு தளபதி சிர்ஸ்கி கூறுகையில், பாக்முத் நகரின் சில போர் முனைகளில், உக்ரைன் ராணுவத்தின் உறுதியான பாதுகாப்பு அரணையும் எதிர்த் தாக்குதல்களையும் சமாளிக்க முடியாமல் ரஷிய படையினர் திணறி வருகின்றனர்.

இதனால் அவர்கள் சுமார் 2 கி.மீ. தொலைவு வரை பின்வாங்கியுள்ளனர் என்றார்.

கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் பகுதிகளில் அமைந்துள்ள டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சான், ஸபோரிஷியா ஆகிய நான்கு பிரதேசங்களில் பெரும்பாலான பகுதிகளை ரஷியா கைப்பற்றியது.

அதில் டொனட்ஸ்கின் பாக்முத்தை கைப்பற்றுவதற்காக போரின் தொடக்கத்திலிருந்தே ரஷியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் அந்த நகரைப் பாதுகாப்பதில் உக்ரைன் படையினர் மிகத் தீவிரமாக உள்ளனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset