நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காஸாவில் இஸ்ரேல் கடும் தாக்குதல்: 13 பேர் உயிரிழப்பு

காஸா சிட்டி:

காஸாவில் இஸ்ரேல் நடத்திய கடுமையான விமானத் தாக்குதலில் இஸ்லாமிய ஜிஹாத் போராளிக் குழுவைச் சேர்ந்த 3 முக்கிய தளபதிகள் உள்பட 13 பேர் பலியாகினர்.

இஸ்லாமிய அறப்போர் அமைப்பின் 3 தளபதிகளைக் குறிவைத்து காஸா சிட்டியிலும், தெற்குப் பகுதி நகரான ரஃபாவிலும் செவ்வாய்க்கிழமை அதிகாலை விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இஸ்லாமிய அறப்போர் அமைப்பின் வடக்கு காஸா பகுதி தளபதி கலீலி பாட்டினி, காஸா மற்றும் மேற்குக் கரை பகுதிகளுக்கு இடையிலான இணைப்புத் தளபதி தாரிக் இஸல்தீன், இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் ராணுவ கவுன்சில் செயலர் ஜிஹாத் கனாம் ஆகிய அந்த மூவரையும் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் அந்த 3 தளபதிகளும் கொல்லப்பட்டனர் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இது குறித்து பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சகம் கூறுகையில், இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதில் இஸ்லாமிய ஜிஹாத் தளபதிகள் தவிர, அவர்களது குழந்தைகள், மனைவிகள், அண்டை வீட்டார் என மேலும் 10 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் மேலும் 20 பேர் காயமடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset