நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

200ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கப்போகும் சிங்கப்பூர் சுல்தான் பள்ளிவாசல்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் என்றாலே பலரின் நினைவிற்கு வருவது தூய்மைதான். அதன் தொடர்ச்சியாக மக்கள் மனதில் அதிகம் பதிந்துள்ள ஒரு விடயம் சுற்றுலா தளங்கள். சிங்கப்பூர் நிலப்பரப்பில் சிறிய அளவு என்றாலும், அதில் 1000க்கும் மேற்பட்ட சுற்றுலா தளங்கள் உள்ளது என்றால் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும்.

அந்த ஆச்சர்யத்துடன் சிங்கப்பூரில் வரலாற்று சிறப்புமிக்க கம்போங் கெலமில் உள்ள சுல்தான் பள்ளிவாசல் அடுத்த ஆண்டு (2024) தனது 200ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கப்போவது இங்குள்ள பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அப்படியென்ன சிறப்பை பெற்றுள்ளது?

“மஸ்ஜித் சுல்தான்” என்றும் அழைக்கப்படும் வரலாற்று சிறப்புமிக்க “சுல்தான் மசூதி” சிங்கப்பூரில் உள்ள முஸ்லீம் சமூகத்தினரை இணைக்கும் பாலமாக இருந்து வருகிறது.

பிரம்மாண்டமான தங்க மனோராக்கல், மிகப்பெரிய பிரார்த்தனை மண்டபத்துடன் சுல்தான் பள்ளிவாசல் அமைந்துள்ளது. நீங்கள் வரலாற்று சிறப்புமிக்க கம்போங் கெலாம் மாவட்டத்தில் இருந்தால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

மஸ்ஜித் சுல்தான், சிங்கப்பூரில் உள்ள ஒரு முக்கிய மசூதி மற்றும் நாட்டின் மிகவும் ஈர்க்கக்கூடிய மத கட்டிடங்களில் ஒன்றாகும்.

Sultan Mosque in Singapore - Historical Attraction in Kampong Glam – Go  Guides

ராஜாவுக்கு ஏற்றது:

சிங்கப்பூரின் முதல் சுல்தானான சுல்தான் ஹுசைன் ஷாவின் விருப்பத்திற்கிணங்க 1824ஆம் ஆண்டு இந்த பள்ளிவாசல் கட்டப்பட்டது.

சிங்கப்பூரின் நிறுவனர் சர் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்ஸ் அவர்கள் தன் தரப்பில் இருந்து இரட்டை அடுக்கு கூரை மற்றும் ஒரு மாடியுடன் கூடிய பள்ளிவாசல் கட்டிடத்தை கட்ட 3,000 சிங்கப்பூர் வெள்ளி கொடுத்தார்.

நூறு ஆண்டுகளுக்கு கடந்த பின்னர், பழைய பள்ளிவாசல் பழுதுபார்க்க வேண்டிய அவசியத்தில் இருந்தது. இன்று நீங்கள் பார்க்கும் தற்போதைய பள்ளிவாசல், சிங்கப்பூரின் மிகப் பழமையான கட்டிடக்கலை நிறுவனமான ஸ்வான், மேக்லரனின் டெனிஸ் சான்ட்ரியால் வடிவமைக்கப்பட்டது. 1932இல் மீண்டும் கட்டப்பட்டது.

மசூதியின் புனரமைப்பு பற்றி அதிகம் அறியப்படாத உண்மை - வடக்குப் பாலம் சாலை, அரபு தெருவுக்கு அப்பால் நீட்டிக்கப்பட்டதால் பள்ளிவாசலைச் சுற்றி வளைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கண்ணாடி அடித்தளம்:

நீங்கள் அங்கு இருக்கும்போது, வெங்காய வடிவ மனோராக்கல் ஆய்வு செய்யுங்கள். ஒவ்வொரு மனோரா கண்ணாடி பாட்டில் முனைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, அதன் கட்டுமானத்தின் போது குறைந்த வருமானம் கொண்ட முஸ்லிம்களால் நன்கொடையாக வழங்கப்பட்டது, 

1975இல் தேசிய நினைவுச்சின்னமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டது, இந்த பள்ளிவாசல் நீண்ட காலமாக முஸ்லிம் சமூகத்தின் மைய புள்ளியாக இருந்து வருகிறது.

Sultan Mosque in Singapore - Historical Attraction in Kampong Glam – Go  Guides

சுல்தான் மசூதியின் 200ஆம் ஆண்டு கொண்டாட்டத்திற்கான சின்னத்தை நேற்று சுல்தான் பள்ளிவாசல் தொண்டர்களுக்கு அதன் மூத்த நிர்வாகிகளால் வெளியிட்டது. அவர்களும் ஒரு அருமையான நோம்பு பெருநாள் நிகழ்வு தொடர்பாக தி கோல்டன் லேண்ட்மார்க் உணவகத்தில் அனைத்து சுல்தான் பள்ளிவாசல் தொண்டர்களுக்கும் சிறப்பான இரவு உணவு மற்றும் பாராட்டு விழா நேற்று  ஏற்பாடு செய்தனர்.

ராயல் கிங்ஸ் கன்சல்டன்சி குழுமத்தின் சார்பாக 200 சுல்தான் பள்ளிவாசல் தன்னார்வலர்கள் பள்ளி  நடவடிக்கைகளில் பங்கேற்றாலும், அதன் நிர்வாக இயக்குநர்  சிராஜுதீன், இயக்குநர்  கேரி ஹாரிஸ், ராயல் கிங்ஸ் கன்சல்டன்சி ஊழியர்களும், சுல்தான் மசூதியில் ஆர்வமுடன் தங்கள் தங்கள் பங்களிப்பை வழங்கி தங்கள் சமூகப் பொறுப்பை வெளிப்படுத்தினர்.

100க்கும் மேற்பட்ட இந்திய, பங்களாதேஷ் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் முப்பது நாட்கள் முழுவதும் எங்களுடன் தன்னார்வத் தொண்டு செய்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம் என்றார்  சிராஜுதீன்.

No photo description available.

படத்தில் இடமிருந்து வலப்புறம் சுல்தான் மசூதி தொண்டர்கள் நவ்சாத், சிராஜ், ஹாரிஸ், அஸ்ஃபாக், மைதீன்

தலைவர் ஜனாப் படேல், சுல்தான் பள்ளிவாசல் அறங்காவலர் குழு, சுல்தான் பள்ளி ஊழியர்கள் ரமலானின் போது உழைத்த தன்னார்வலர்களைப் பாராட்டவும் நன்றி தெரிவிக்கவும் ஒரு அழகான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.

May be an image of one or more people, dais and text

பங்குகொண்ட அனைத்து தன்னார்வலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

சுல்தான் பள்ளிவாசல் நிர்வாகமும், ஊழியர்களும் பள்ளிவாசல் தன்னார்வத் தொண்டர்களுக்கு ஓர் அற்புதமான பாராட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய மிகவும் சிரமப்பட்டதை கேரி ஹரிஸ் நெகிழ்ச்சியுடன் கூறினார். 

மஸ்ஜித் சுல்தான், சிங்கப்பூரில் உள்ள ஒரு முக்கிய பள்ளிவாசல் மட்டுமல்ல நாட்டின் மிகவும் ஈர்க்கக்கூடிய அழகான கட்டிடங்களில் ஒன்றாகும்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset