நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உலகின் 10 பெரியப் பொருளாதார நாடுகளின் பட்டியலில் ரஷ்யா மீண்டும் இணைந்துள்ளது

மாஸ்கோ:

2022-ஆம் ஆண்டில் 2.3 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்கள் உற்பத்திச் சேவைகளை வழங்கி கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகின் பத்து பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் மீண்டும் முதல் முறையாக எட்டாவது இடத்தை ரஷ்யா பிடித்துள்ளதாக உலக வங்கியும் ஸ்புட்னிக் ஆய்வும் செய்த புள்ளிவிவர சேவைகளின் தரவுகள் தெரிவிக்கின்றது. 

கடந்த 2014-ஆம் ஆண்டில், ரஷ்யா 2.05 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்து உலகின் முக்கிய பொருளாதாரங்களின் பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது.

அதே நேரத்தில் 2021-ஆம் ஆண்டில் நாடு 11 வது இடத்தைப் பிடிக்கும் என்று அந்தத் தரவு கூறுகிறது.

2022-ஆம் ஆண்டில் உலகின் மிகப் பெரியப் பொருளாதார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் வகிக்கின்றது.

25.5 டிரில்லியன் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்துள்ளது. இந்தப் பட்டியலில் 17.9 டிரில்லியன் அமெரிக்க டாலருடன் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. 

அதனைத் தொடர்ந்து 4.2 டிரில்லியன் அமெரிக்க டாலருடன் ஜப்பானும் 4.07 டிரில்லியன் அமெரிக்க டாலருடனும் ஜெர்மனியும் 3.4 டிரில்லியன் அமெரிக்க டாலருடனும் இந்தியாவும் இடம்பெற்றுள்ளன. 

பிரிட்டன் பொருளாதார நாடுகள் பட்டியலில் 3.07 டிரில்லியன் அமெரிக்க டாலருடனும் ஆறாவது இடத்திலும் பிரான்ஸ் 2.8 டிரில்லியன் அமெரிக்க டாலருடனும் ஏழாவது இடத்தில் உள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset