நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ராணுவ விமானத் தாக்குதல்

ஜெருசலேம்:

இஸ்ரேல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த பாலஸ்தீனத்தின் முக்கிய உறுப்பினர் காதர் அட்னான் உயிரிழந்ததைக் கண்டித்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக, ஹமாஸ் போராளிகள் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 5 பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர்.

குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படாமல் இஸ்ரேல் சிறையில் அடைக்கப்படும் கைதிகள், சிறைக்குள் உண்ணாவிரதம் இருந்து எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

காதர் அட்னான் 3 மாத கால உண்ணாவிரதத்துக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

உண்ணாவிரதம் இருந்து சிறையில் உயிரிழந்த பாலஸ்தீனர் காதர் அட்னான்

இதனைக் கண்டித்து இஸ்ரேல் மீது பாலஸ்தீன போராளி குழுவினர் தாக்குதல் நடத்தினர்.

காஸா பகுதியிலிருந்து தெற்கு இஸ்ரேலில் 22 ஏவுகணைகள் வீசப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் 25 வயது நபர் படுகாயமடைந்தார்; மேலும் 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக, காஸா பகுதியிலுள்ள ஹமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல் நடத்தியுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset