நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அதிபர் புதினை கொல்ல ட்ரோன் தாக்குதல்: உக்ரைன் மீது ரஷியா குற்றச்சாட்டு

கீவ்:

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை கொல்வதற்காக அவரது மாளிகையான கிரெம்ளின் மீது ட்ரோன் தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக ரஷியா குற்றம்சாட்டியது. இதற்காக உக்ரைனுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் ரஷியா எச்சரித்துள்ளது.

எனினும், கிரெம்ளின் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.

14 மாதங்களாக நீடித்து வரும் ரஷியா - உக்ரைன் போரில் உக்ரைனின் பல நகரங்களில் ரஷியா குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் அகதிகளாக நேட்டோ நட்பு நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

இதனால் கடந்த சில தினங்களாக உக்ரைன் மீது ரஷியாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.

பொதுமக்கள் வாழும் பகுதிகளில் ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம்சாட்டியது.

இந்நிலையில், ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையான கிரெம்ளின் மீது செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷிய செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோ தெரிவித்தார்.

"அதிபர் புதினை கொல்ல நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இந்தத் தாக்குதல் நடைபெற்றபோது புதின் மாஸ்கோ புறநகர் பகுதியான நோவா-ஒகார்யோவோ மாளிகையில் இருந்தார் என்று பெஸ்கோ தெரிவித்தார்.

இந்த ட்ரோன் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று கூறியுள்ள உக்ரைன் அதிபரின் ஆலோசகர் மிக்ஹைலோ போடால்யாக், உக்ரைனின் முக்கிய நகரங்களில் பொதுமக்கள், கட்டடங்கள் மீது ரஷியா நடத்த உள்ள தாக்குதலை நியாப்படுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset