நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மத சுதந்திர நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்திய அமைப்புகளுக்கு தடை: அமெரிக்க ஆணையம் வலியுறுத்தல்

வாஷிங்டன்:

மத சுதந்திர நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்திய இந்திய அரசின் அமைப்புகள் மீது தடை விதிக்க வேண்டும் என அமெரிக்க அரசுக்கு சர்வதேச மத சுதந்திர ஆணையம் USCIRF வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் நிலவும் மத சுதந்திர சூழல் குறித்து இந்த ஆணையம் ஆய்வு மேற்கொண்டு வெளியிட்ட அறிக்கையில்,

மத சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையிலான சட்டங்களை ஒன்றிய, மாநில அரசுகள் இயற்றின. மதமாற்றம், ஹிஜாப் அணிதல், பசுவதை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இயற்றப்பட்ட சட்டங்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், தலித்துகள், பழங்குடியினரைப் பாதித்தது.

மத சிறுபான்மையினரின் குரலைத் தொடர்ந்து ஒடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. சிறுபான்மையினரின் சொத்துகளை இடித்துத் தள்ளுதல், சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தல், அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்றுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளுதல் உள்ளிட்டவற்றின் மூலமாக அரசுக்கு எதிரான குரல்கள் ஒடுக்கப்பட்டன.

மத சுதந்திர நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திய இந்திய அரசின் அமைப்புகள் மீது தடை விதிக்க வேண்டும்.

இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது இந்த விவகாரத்தை இந்தியாவிடம் அமெரிக்கா எழுப்ப வேண்டும். மேலும், மத சுதந்திர விவகாரத்தில் இந்தியாவை அதிதீவிர பாதிப்புக்குரிய பகுதி என அறிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத சுதந்திர விவகாரத்தில் இதேபோன்ற குற்றச்சாட்டுகளை இதற்கு முன்பும் இந்தியா மீது யுஎஸ்சிஐஆர்எஃப் சுமத்தியுள்ளது. அத்தகைய குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை  என்று  இந்தியா தெரிவித்திருந்தது.

இதே கருத்தை தற்போதும் இந்தியா கூறியுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset