நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்த ஆண்டு கோவிட்-19 தொற்றால் ஏற்பட்ட இறப்புகள் 95 விழுக்காடு குறைந்துள்ளது; இருப்பினும் எச்சரிக்கை தேவை: உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா: 

கோவிட்-19 காரணமாக இவ்வாண்டு பதிவாகியுள்ள இறப்பு சம்பவங்கள் 95 விழுக்காடு குறைந்திருந்தாலும் அந்தத் தொற்று பரவல் இன்னும் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும் என்று உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

உலக சுகாதார அமைப்பு (WHO) நேற்று COVID-19 காரணமாக இறப்புகள் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 95 சதவீதம் குறைந்துள்ளது என்று கூறியது.

ஆனால் வைரஸ் உலகெங்கும் இன்னும் உள்ளது என்று அது எச்சரித்தது.

மக்கள் கோவிட்-19 தொற்றோடு வாழ்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும்.

கோவிட்-19 காரணமாக பதிவான இறப்புகள் தொடர்ந்து குறைந்து வருவது தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. 

இருப்பினும், சில நாடுகளில் தொற்று அதிகரித்து வருகின்றது. கடந்த நான்கு வாரங்களாக, இந்த தொற்றுநோயால் 14,000 பேர் இறந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset