செய்திகள் உலகம்
சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறி இல்லை: ஐ நா சபை கவலை
ஜெனிவா:
ஆட்சி அதிகாரத்தை ஆயுத பலம் மூலம் கைவசமாக்கலாம் என்ற நம்பிக்கையில் இருதரப்புமே போரிட்டு வருவதாகவும் அமைதிக்கு அவர்கள் தயாராக இல்லை என்று ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
சூடான் நாட்டில் கடந்த சில நாட்களாக ராணுவத்திற்கும் துணை ராணுவ படையினருக்கும் இடையேயான சண்டை தீவிரமடைந்து, 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 3,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர்.
சூடானில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்க ஏதுவாக, 72 மணிநேர போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது என கூறப்பட்டது.
எனினும், அதனையும் மீறி இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
இதனால், சூடானில் உள்ள வெளிநாட்டை சேர்ந்தவர்களை மீட்கும் பணியில் அந்தந்த நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இந்தப் பணியில் அமெரிக்கா, ஃபிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவியுடன் நேரிடையாக களத்தில் இறங்கி, தங்களது தூதர்கள் மற்றும் குடிமக்களை மீட்டு வருகின்றன.
இந்நிலையில் ஆட்சி அதிகாரத்தை ஆயுத பலம் மூலம் கைவசமாக்கலாம் என்ற நம்பிக்கையில் இருதரப்புமே போரிட்டு வருவதாகவும் அமைதிக்கு அவர்கள் தயாராக இல்லை என்று ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 6:25 pm
பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம்: 57 பேர் மாண்டனர்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm
இஸ்ரேல் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவிப்பு
May 4, 2024, 10:10 pm
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா போலிஸ்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am