நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

உலகின் பிரம்மாண்ட ஸ்டார்ஷிப் ராக்கெட் ஏன் ஸ்டார்ட் ஆகவில்லை?

டேக்ஸாஸ்: 

விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்லக்கூடிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட "ஸ்டார்ஷிப்' ராக்கெட்டை முதல்முறையாக விண்ணில் செலுத்தும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்குக்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட ஸ்டார்ஷிப் ராக்கெட்,  அதிக எடையை சுமந்து செல்லக்கூடியதாகும்.

சுமார் 400 அடி உயரம் கொண்டது. மீண்டும் பயன்படுத்தக்கூடியது.

சோதனை முறையில் செலுத்தப்படுவதால் அதில் மனிதர்களோ, செயற்கைக் கோள்களோ இல்லை.

250 டன் வரையும் எடையை சுமந்து செல்லக்கூடிய இந்த ராக்கெட், முதல்முறையாக திங்கள்கிழமை விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்தது.

முதல் நிலை உந்து பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

20-ஆம் தேதி ஸ்டார்ஷிப் ராக்கெட்டை விண்ணும் செலுத்தப்படும் என்று ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலவுக்கும், செவ்வாய்க்கிரகத்துக்கும் மனிதர்கள் மற்றும் பொருள்களை அனுப்பும் நோக்கில் ஸ்டார்ஷிப் ராக்கெட்டை ஸ்பேஸ்எக்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset