
செய்திகள் விளையாட்டு
தெலுக் இந்தானில் புட்சால் போட்டி: 64 குழுக்கள் பங்கேற்கும்
பூச்சோங்:
தெலுக் இந்தானில் நடைபெறவிருக்கும் புட்சால் போட்டியில் 64 குழுக்கள் பங்கேற்கும் என்று அதன் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் மாஸ்டர் உகாந்தருண் சுகுமார் கூறினார்.
புட்சால் வித் ஸ்டார் 2.0 எனும் புட்சால் போட்டி இரணடாவது ஆண்டாக நடைபெறவுள்ளது.
இப்போட்டி வரும் மே 20ஆம் தேதி காலை 8 மணி முதல் தெலுக் இந்தான் அரேனா ஸ்குவேயரில் நடைபெறவுள்ளது.
கிட்டத்தட்ட 64 குழுக்கள் இப் போட்டியில் பங்கேற்கும் என நாங்கள் எதிர்பார்க்கிரோம்.
முதலில் வரும் 20 குழுக்களுக்கு 100 வெள்ளியும் அதற்கு பின் வரும் குழுக்களுக்கு 130 வெள்ளியும் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.
இப் போட்டியில் வெற்றி பெறும் முதல் அணிக்கு 3 ஆயிரம் வெள்ளியும் வெற்றி கிண்ணமும் பரிசக வழங்கப்படவுள்ளது.
இரண்டாவது இடத்திற்கு 1,500 வெள்ளியும் மூன்றாவது இடத்திற்கு 750 வெள்ளியும் பரிசாக வழங்கப்படவுள்ளது
அதே வேளையில் தங்க காலணி, தங்க கையுறை, தங்கப் பந்து, தங்க ஆட்டக்காரர் ஆகிய விருதுகளும் வழங்கப்படவுள்ளது.
இப்போட்டியில் பெண்கள் அணியும் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றன. அவ்வணிகளுக்கு 50 வெள்ளி கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.
இப்பிரிவில் வெற்றி பெறும் முதல் அணிக்கு 300 வெள்ளியும் இரண்டாவது அணிக்கு 150 வெள்ளியும் பரிசு வழங்கப்படவுள்ளது என்று உகாந்தருண் சுகுமார் கூறினார்.
இளைஞர்களிடையே புட்சால் ஊக்குவிக்கும் நோக்கில் இந்த புட்சால் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே நாடு தழுவிய நிலையில் உள்ள அணிகள் திரளாக வந்து இப்போட்டியில் கலந்து கொள்ளுமாறு சாய் எப்எம் சிவா கேட்டுக் கொண்டார்.
இப்போட்டி குறித்த மேல்விவரங்களுக்கு 014-908 2353 என்ற எண்களுடன் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2025, 6:29 pm
ஆயர்தாவார் தமிழ்ப்பள்ளி சக்கரவியூகம் சதரங்கப் போட்டியில் பல இன மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்
August 11, 2025, 10:02 am
ஜோன் காம்பர் கிண்ணம்: பார்சிலோனா சாம்பியன்
August 11, 2025, 9:55 am
எப்ஏ கமுனிட்டி கிண்ணம்: கிறிஸ்டல் பேலஸ் சாம்பியன்
August 10, 2025, 9:54 am
கிளப்களுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
August 10, 2025, 9:30 am
கிளப்புகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
August 9, 2025, 10:33 am
பலோன் டி ஓர் விருதில் நம்பகத்தன்மை இல்லை: ரொனால்டோ
August 9, 2025, 9:52 am
கிளப்புகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி: செல்சி வெற்றி
August 9, 2025, 8:59 am
சிஎஸ்கே அணியில் இருந்து அஸ்வின் வெளியேற முடிவு?
August 8, 2025, 12:24 pm
சுக்மா சிலம்பம் விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும்: டத்தோ முருகையா
August 8, 2025, 12:20 pm