நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

இங்கிலாந்து ரோயல் விமானப்படையின் வாரண்ட் அதிகாரியாக முதல் மலேசிய இந்தியர் 'சுப்பி' சுப்பிரமணியம் நியமனம்

கோலாலம்பூர்:

இங்கிலாந்து ரோயல் விமானபடையின் வாரண்ட் அதிகாரியாக 'சுப்பி' சுப்பிரமணியம் நியமனம் பெற்றுள்ளார்.

இதன் மூலம் அப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் மலேசிய இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

சுப்பிரமணியம் வான், விண்வெளி இயக்க மேலாளர் ஆவார். இவர் கடந்த 15 ஆண்டுகள் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.

SBIRS எனப்படும் வின்வெளி அகசிவப்பு அமைப்பு, MW எனப்படும் ஏவுகணை எச்சரிக்கை, SDA எனப்படும் விண்வெளி டொமைன் விழிப்புணர்வு, BMD எனப்படும் பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு ஆகிய துறைகளில் பணியாற்றியுள்ளார்.

கடந்த 1998ஆம் ஆண்டு அவர் இங்கிலாந்து ரோயல் விமானப் படையில் இணைந்தார்.

அப்படையில் பொறியியல் உட்பட பல பிரிவுகளில் பணியாற்றி தற்போது இங்கிலாந்து ரோயல் விமானப்படையின் வாரண்ட் அதிகாரியாக பதவியேற்றுள்ளார்.

சுப்பிரமணியம் தனது 19ஆவது வயது வரை மலேசியாவில் கல்வி பயின்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset