செய்திகள் இந்தியா
கேரள மார்க்சிஸ்ட் எம்எல்ஏ வெற்றி செல்லாது
கொச்சி:
கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜாவின் தேர்தல் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
2021 பேரவைத் தேர்தலில், இடுக்கி மாவட்டத்தில் தனித் தொகுதியான தேவிகுளத்தில் போட்டியிட்ட ராஜா போலி ஜாதிச் சான்றிதழ் அளித்ததாக அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் டி.குமார் தாக்கல் செய்த வழக்கில் மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மறுப்பு தெரிவித்திருந்த ராஜா, தான் ஹிந்து பட்டியலினத்தவர் சமூகத்தைச் சேர்ந்தவர். இதற்கான ஜாதிச் சான்றிதழை தேவிகுளம் தாசில்தார் அளித்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்யும்போதே குமாரின் குற்றச்சாட்டை தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரித்துவிட்டார். ஹிந்து மதத்தின்படியே நான் திருமணம் செய்து கொண்டேன் என்று நீதிமன்ற விசாரணையின்போது தெரிவித்தார்.
இந்த வழக்கில் நீதிபதி பி.சோமராஜன் திங்கள்கிழமை அளித்த தீர்ப்பின் விவரம்:
தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பே ராஜா கிறிஸ்தவத்துக்கு மாறிவிட்டார். திருமணத்தின்போது ராஜா தம்பதி கிறிஸ்தவ திருமண உடையில் இருந்துள்ளனர்.
கிறிஸ்தவ மதத்தை பின்பற்றிவிட்டு, தன்னை ஹிந்து என கூறிக் கொள்ள முடியாது. தனித் தொகுதியான தேவிகுளத்தில் போட்டியிடுவதற்கான தாழ்த்தப்பட்டோர் பிரிவை ராஜா சாராதததால் அவர் பெற்ற வெற்றி செல்லாது என்று நீதிபதி உத்தரவிட்டார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 24, 2026, 11:34 am
இந்தியாவில் நீர் பருகும்படி பள்ளிகளில் ஒலிக்கும் மணி
April 22, 2026, 12:48 pm
கேரளாவில் பயங்கரம்: பட்டாசு கிடங்கு தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு
April 21, 2026, 5:40 pm
கர்நாடகாவில் விபச்சார மோசடி அம்பலம்: ஸ்பாக்களில் நடந்த சோதனையில் 6 பேர் கைது
April 21, 2026, 5:00 pm
காதல் விவகாரத்தால் நேர்ந்த விபரீதம்: மகளைக் கொடூரமாகக் கொன்ற தந்தை கைது
April 21, 2026, 4:27 pm
மும்பையில் பயங்கரம்: தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு 25 அடி ஆழக் கிணற்றுக்குள் பாய்ந்த கார்
April 21, 2026, 12:13 pm
கேரளத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டதாக காங்கிரஸ் புகாா்
April 20, 2026, 5:31 pm
சந்தேகத்தால் சிதைந்த உறவு: 17 வயது இளைஞர் அடித்துக் கொலை
April 20, 2026, 4:55 pm
