செய்திகள் தமிழ் தொடர்புகள்
உத்தவ் தாக்கரேவுடன் ரஜினிகாந்த் சந்திப்பு
மும்பை:
மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும் சிவசேனை உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரேவை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.
மறைந்த சிவசேனை நிறுவனர் பால் தாக்கரேவின் தீவர ஆதரவாளரான நடிகர் ரஜினிகாந்த், மரியாதை நிமித்தமாக உத்தவ் தாக்கரேவை சந்தித்தார். இது அரசியல் சாராத சந்திப்பு' என்று அவருடைய கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.
ரஜினிகாந்தை வரவேற்கும் புகைப்படத்தை எம்எல்ஏவும் மாநில முன்னாள் அமைச்சருமான ஆதித்ய தாக்கரே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதற்கு முன்பாக 2010ஆம் ஆண்டு இதே இல்லத்தில் பால் தாக்கரேவை ரஜினிகாந்த சந்தித்தார்.
கடந்த 2021 அரசியல் பிரவேசத்தை கைவிடுவதாக ரஜினிகாந்த் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கான காரணத்தை அண்மையில் தெரிவித்த ரஜினிகாந்த், "நான் அரசியல் பணியை தொடங்கியபோது கொரோனா அலை தொடங்கியது. கொரோனா பாதிப்பு காரணமாக கூட்டம் அதிகமுள்ள இடத்துக்கு செல்லக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன் காரணமாகவே அரசியலுக்கு நான் வரவில்லை' என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 31, 2025, 4:09 pm
வலம்புரி கவிதா வட்டத்தின் கவியரங்கம்
December 28, 2025, 6:57 pm
தமிழகத்தில் ஜனவரி 3 வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
December 28, 2025, 7:49 am
சென்னையில் 100 இடங்களில் ஸ்மார்ட் தானியங்கி சிக்னல்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது
December 27, 2025, 8:31 am
பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்: அன்புமணி உத்தரவு
December 26, 2025, 4:35 pm
அதிமுகவில் விருப்ப மனு அளிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு: எடப்பாடி பழனிசாமி
December 24, 2025, 7:28 am
