
செய்திகள் மலேசியா
மருத்துவ பரிசோதனைகள் குறித்து பி40 மக்களிடையே முழு விழிப்புணர்வு தேவை: பிரபாகரன்
கோலாலம்பூர்:
மருத்துவ பரிசோதனைகள் குறித்து பி40 மக்களிடையே முழு விழிப்புணர்வு தேவை என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன் கூறினார்.
பி40 பிரிவு மக்களின் சுகாதார நலனை கருதி பத்து நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பில் சுகாதார சமூக நல அமைப்பின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
செந்துல் ஸ்ரீ பேரா குடியிருப்புப் பகுதியில் நடத்தப்பட்ட இந்த இலவச மருத்துவ பரிசோதனை முகாமில் அப்பகுதியை சேரந்த, வசதி குறைந்த பொதுமக்கள் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்துக் கொண்டனர்.
இங்கு வாழும் அதிகமான வசதி குறைந்த மக்கள் மருத்துவ செலவினங்களை ஈடுகட்ட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
அவ்வகையில் அவர்கள் தங்களின் சுகாதார நலன் குறித்து அடிப்படை பரிசோதனை செய்வதற்கு கூட வசதியின்றி இருக்கின்றனர்.
இவர்களில் அதிகமானோர் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இருதய நோய், பார்வை குறைவு போன்ற பல நோய்களில் பாதிக்கப்பட்டு அதற்கு முறையான சுகாதார பரிசோதனையை மேற்கொள்வதற்கும் தகுந்த மருத்துவர்களை நாடுவதற்கும் சிரமத்தை எதிர் நோக்கி வருகின்றனர். இவர்களில் சிலர் தங்களுக்கு எவ்வகையான நோய்வாய் இருப்பது கூட தெரியாமல் உள்ளனர்.
ஆகவே இவர்களுக்கு மருத்துப ரீதியில் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற முயற்சியில் இந்த அடிப்படை இலவச மருத்துவ பரிசோதனை முகாமை ஒருங்கிணைக்க முன் வந்ததாக அவர் கூறினார்.
மேலும் தன்னோடு இணைந்து இந்த முகாமிற்கு நிறைய மருத்துவமனைகள் மருத்துவ பரிசோதனை சேவைகளை வழங்க முன் வந்ததாக அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 10:28 pm
நாட்டில் அதிகரித்துள்ள அவதூறு அரசியலை நேர்மையுடன் எதிர்த்து போராட வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
July 18, 2025, 3:34 pm
நிக் அடம்ஸ் நியமனம் குறித்து முடிவு செய்ய இன்னும் கால அவகாசம் உள்ளது: பிரதமர் அன்வார்
July 18, 2025, 3:33 pm