
செய்திகள் வணிகம்
ஹஜ், உம்ரா புனிதப் பயணிகளுக்கான உணவுப் பொருட்களை வழங்க சவுதி நிறுவனத்துடன் மலேசிய நிறுவனங்கள் ஒப்பந்தம்
கோலாலம்பூர் :
சவுதி அரேபியாவைத் தளமாகக் கொண்ட Mrasi Almamoura குழுமமும் மலேசிய நிறுவனமான Syed Food Industry Sdn Bhd, Fario Holdings Sdn Bhd இணைந்து ஹஜ், உம்ரா பயணிகளுக்குத் தேவையான சமையல் பொருட்கள், பானங்கள், உடனடியாக உண்ணும் உணவுகள் போன்றவற்றைத் தயார் செய்து விநியோகம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெப்பமிட்டுள்ளன.
வளர்ந்து வரும் சேவைத் துறையையும் இந்த கூட்டணியில் இருப்பதாக மலேசியா வெளிநாட்டு வர்த்தக மேம்பாட்டுக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவின் ஹஜ், உம்ரா அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 2023-ஆம் ஆண்டின் ஹஜ் உம்ரா சேவைகள் மாநாடு மற்றும் கண்காட்சியில் இணைந்து அண்மையில் Jeddah Superdome-மில் நடைபெற்ற ஒப்பந்த விழாவின் போது இந்த கூட்டாண்மை உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், சையத் ஃபுட் இண்டஸ்ட்ரி, தென்கிழக்காசிய, மேற்கத்திய மற்றும் மத்திய கிழக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான உணவு வகைகளை வழங்கும்.
ஹஜ், உம்ரா பயணிகளுக்கு உடனடியாக உண்ணும் உணவுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மிராசி அல்மமோரா கவனித்துக் கொள்ளும்.
Fario Holdings வாடிக்கையாளர்களுக்கு இயந்திர தானியங்கி காப்பி மற்றும் இதர பானங்கள் வசதியைக் கொண்டு வருகிறது.
ஹஜ், உம்ரா புனித யாத்ரிகர்ளுக்கு உணவு வசதிகளைக் கவனிப்பதும் அவர்களின் நலனைப் பாதுகாப்பதில் இரு நிறுவனங்களுடனும் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக Mrasi Almamoura குழுமம் தெரிவித்துள்ளது.
பொது உபயோகத்திற்காக பாதுகாப்பான மற்றும் தரமான உணவை வழங்குவதற்கான சவூதி அரசாங்கத்தின் பார்வையுடன் இதுவும் இணைந்துள்ளது" என்று ம்ராசி அல்மமோராவின் தலைமை நிர்வாக அதிகாரி ஃபுவாட் மோர்சி கூறினார்.
தளவாடங்கள், சுகாதாரம், தொழில்நுட்பம், சுற்றுலாத் துறையில் சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவதன் மூலம் புனிதப்பயணிகளின் எண்ணிக்கையை 30 மில்லியனாக உயர்த்துவதை சவுதி விஷன் 2030 நோக்கமாகக் கொண்டுள்ளது.
- அஸ்வினி
தொடர்புடைய செய்திகள்
May 8, 2025, 6:37 am
இந்திய ராணுவ தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் பங்குச் சந்தை 6,272 புள்ளிகள் வீழ்ச்சி
May 6, 2025, 12:42 pm
தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது: சர்வதேச சந்தை ஆய்வாளர் யீப் ஜுன் ரோங்
May 1, 2025, 8:09 pm
உலகளவில் அதிக தங்கம் கையிருப்பு வைத்துள்ள நாடுகளில் இந்தியாவுக்கு 7-ஆவது இடம்
April 22, 2025, 10:06 am
தங்கத்தின் விலை 3,400 அமெரிக்க டாலர்களுக்கு மேல் உயர்ந்து புதிய சாதனை அளவை எட்டியுள்ளது
April 17, 2025, 6:11 pm
எஹ்சான் வர்த்தகக் குழுமத்திற்கு இவ்வாண்டு வெற்றி ஆண்டாக அமையும்: டத்தோ அப்துல் ஹமித் நம்பிக்கை
April 15, 2025, 5:40 pm
சிங்கப்பூர், இந்தியா இடையே ஓராண்டில் மட்டும் 5.5 மில்லியன் பேர் விமானப் பயணம்
April 3, 2025, 4:41 pm
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரி விதிப்பு: ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவு கண்டன
April 3, 2025, 10:46 am