
செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழகத்தில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க முடிவு
சென்னை:
பயண நேரத்தை குறைக்கும் வகையில் தமிழ்நாட்டில் முக்கிய ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் வழித்தடத்தில் வேகத்தை அதிகரித்து, பயண நேரத்தை குறைக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
இதற்காக, தண்டவாளம் மற்றும் சிக்னல் முறையை மேம்படுத்துதல், வேகக் கட்டுப்பாடுகளை அகற்றுதல், பாலங்களை சீரமைத்தல், மேம்பாலம் மற்றும் சுரங்கம் கட்டுமானப் பணிகளை செய்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ஏற்கனவே சென்னை சென்ட்ரல்-கூடூர், சென்னை சென்ட்ரல்-அத்திப்பட்டு, சென்னை-அரக்கோணம்-ரேணிகுண்டா ஆகிய வழித்தடங்களில் சமீபத்தில் அடுத்தடுத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.
அப்போது, இந்த வழித்தடங்களில் மணிக்கு அதிகபட்சம் 145 கி.மீ. வேகம் வரை ரயில் இன்ஜினை இயக்கி சோதனை நடத்தப்பட்டது. இந்த நிதி ஆண்டில் சென்னை-கூடூர், சென்னை-ரேணிகுண்டா ஆகிய 2 வழித்தடங்களில் 130 கி.மீ. வேகம் வரை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, தஞ்சாவூர்-பொன்மலை, விருத்தாசலம்-சேலம், விழுப்புரம்-புதுச்சேரி, மதுரை-திருநெல்வேலி, விழுப்புரம்-காட்பாடி, அரக்கோணம்-செங்கல்பட்டு, திருநெல்வேலி-தென்காசி, திருநெல்வேலி-திருச்செந்தூர், தஞ்சாவூர்-நாகர்கோவில் ஆகிய 9 வழித்தடங்களில் 110 கி.மீ. வரை வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையிலிருந்து ரேணிகுண்டா மற்றும் அரக்கோணத்திலிருந்து ஜோலார்பேட்டை வரை இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை 110 கிலோமீட்டரில் இருந்து 130 கிலோமீட்டராக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 20, 2023, 2:21 pm
ஐ.நா.,சபையில் திருவள்ளுவர் சிலையை நிறுவ முயற்சி
March 20, 2023, 11:02 am
டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடத்தின் வெள்ளிவிழா
March 19, 2023, 5:41 pm
உத்தவ் தாக்கரேவுடன் ரஜினிகாந்த் சந்திப்பு
March 19, 2023, 10:38 am
திருச்சி அருகே லாரி மீது கார் மோதி விபத்து - சிறுமி உள்பட 6 பேர் பலி
March 19, 2023, 10:33 am
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ மேஜர் ஜெயந்த் உடல் தமிழகத்தில் தகனம்
March 18, 2023, 6:52 pm
இனி அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவி ராஜினாமா: அண்ணாமலை மிரட்டல் பேச்சு
March 17, 2023, 6:58 pm
தமிழகத்தில் மார்ச் 20 வரை இடி, மின்னலுடன் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
March 17, 2023, 6:54 pm