நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

கமலின் மக்கள் நீதி மய்யத்தின் இணையதளம் ‘ஹேக்’ செய்யப்பட்டது: காவல்துறையில் புகார்

சென்னை:

மக்கள் நீதி மய்யத்தின் இணையதளம் ‘ஹேக்’ செய்யப்பட்டது குறித்து சென்னை பெருநகர காவல் துறை ஆணையரகத்தில் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

நடிகா் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரபூா்வ இணையதளத்தை மா்ம நபா்கள் முடக்கி, அக்கட்சியை காங்கிரஸுடன் இணைக்க இருப்பதாக தகவல் வெளியிட்டு இருந்தனா். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், ‘மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரபூா்வ இணையதளம் விஷமிகளால் ‘ஹேக்’ செய்யப்பட்டுள்ளது. ஜனநாயக சக்திகளை ஒடுக்கியே பழக்கப்பட்டவா்களின் செயல்களுக்கு அஞ்சாமல் தக்க பதிலடி கொடுப்போம்’ என அக்கட்சி தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இணையதளம் முடக்கப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் நீதி மய்யம் சாா்பில் தலைமை நிலைய செயலா் அா்ஜுனா், சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இணையதளம் முடக்கப்பட்டதில் அரசியல் சதி இருக்கிறது. காவல் துறையினா் சரியான முறையில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பாா்கள் என்று நம்புகிறோம்’ என்றாா்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset